Breaking News

ஈழவர் ஜனநாயக முன்னணி மறுசீரமைப்பு மகாநாடு

(லியோ )
ஈழவர் ஜனநாயக முன்னணி  (ஈரோஸ்) கட்சியின் மறுசீரமைப்பும் , கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான ஊடக சந்திப்பும் இன்று இடம்பெற்றது .

ஈழவர் ஜனநாயக முன்னணி  கட்சியின் ( ஈரோஸ்)  மறுசீரமைப்பு பிரகடன மகாநாடு இன்று மட்டக்களப்பு  போகஸ் மண்டபத்தில்  கட்சியின் தவிசாளர் அருளர் அருள் பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது .

ஈழவர் ஜனநாயக முன்னணி  வடக்கு கிழக்கு மற்றும் மலையக உறுப்பினர்களை உள்ளடக்கியதாக  கட்சியின் மறுசீரமைப்பு பிரகடன மகாநாடு இன்று இடம்பெற்றது .

இன்று இடம்பெற்ற ஈரோஸ் கட்சியின் மறுசீரமைப்பு  மகாநாட்டில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தமிழ் மக்களின் விடியலுக்காக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டில் கலந்துகொண்ட மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது .

இந்த மகாநாட்டினை தொடர்ந்து கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது .

இந்த ஊடக சந்திப்பின் போது கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில் ஈழவர் ஜனநாயக முன்னணி  தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டமை  தமிழ் மக்களின் விடியலுக்காக  செயல்படுவதற்காகவும்  அதேவேளை  மக்களின் நலனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியிடனும் இணைந்து   மக்களுக்காக சேவையாற்ற இருப்பதாகவும் தெரிவித்துகொண்டார் .        

இதன் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் பதில் அளித்தார் .

இடம்பெற்ற ஊடக சந்திப்பு நிகழ்வில்  ஈழவர் ஜனநாயக முன்னணியின் தவிசாளர் அருளர் அருளம்பலம் , கட்சியின் செயலாளர் நாயகம் . ராஜநாதன் பிரபாகரன் , பொருளாளர் எஸ் சிவானந்த ராஜா (பண்டா ) ஈழவர் ஜனநாயக முன்னணியின் வடமாகாண பிரதம அமைப்பாளர் எஸ் . சிவநாதன் மற்றும் கட்சியின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்