Breaking News

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இழவரசர் செய்யித் அல் ஹூஸைன் இலங்கையை வந்தடைந்தார்

இலங்கை அரசின் அழைப்பையெற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்  இழவரசர் செய்யித் ராத் அல் ஹூஸைன் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். 

இலங்கையை வந்தடைந்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹூஸைன் எதிர்வரும் 10ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்றவருடம்  இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே அவர் இன்று இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

மேலும் இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அரச தலைவர்கள்ளுடனும்  பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்விஜயத்தின்போது நாளை மற்றும் நாளை மறுதினம் அவர் யாழ்ப்பாணம், திருகோணமலை  மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.