இலங்கைத் திருநாட்டின் 68வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கெளரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வாழ்த்து செய்திகள்.
இலங்கைத் திருநாட்டின் 68வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கெளரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்து செய்தியினை நாட்டு மக்களிற்கு தெரிவித்துள்ளனர்.
தேசிய நல்லிணக்கம் சகோதரத்துவதத்தின் ஊடாக ஒரே நாடு ஒரே இனத்தை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாய் நாட்டின் மரபுரிமையை தேசிய மரபுரிமையாக்கி இலங்கையை மீள் நிர்மாணிப்பதற்கு தாம் உட்பட தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் குறிப்பி்ட்டுள்ளார். இன மத குல பேதங்களை கடந்து மனித உறவுகளை வலுப்படுத்திய சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவது தமது நோக்கம் என ஜனாதிபதி தமது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சுதந்திர தின வாழ்த்து செய்தியினை வௌியிட்டுள்ளார் .
சர்வதேசத்தின் முன்னிலையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் சுதந்திர மற்றும் கௌரவமான நாடாக நாட்டின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதாக பிரதமரின் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை பாதுகாத்து , வளமான பொருளாதார சூழலை நாட்டில் கட்டியெழுப்ப வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்ைகளை அரசாங்கம் உரிய முறையில் முன்னெடுப்பதாகவும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்தியின் நிமித்தம் அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட இன்றைய நாளில் உறுதி பூண வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- A.D.ஷான் -
- A.D.ஷான் -







