உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையில் விஷேட செயலமர்வு காத்தான்குடியில்.
காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையில் மாணவ மாணவிகளின் திறன்களை விருத்தி செய்யும் முகமாக மாதாந்தம் விஷேட செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு அண்மையில் காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை கேட்போர் கூடத்தில் உடல் ஆரோக்கியமும் உடற்பயிற்சியும் எனும் தொனிப் பொருளில் விஷேட செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.
இதில் வளவாளராக காத்தான்குடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ரஹ்மதுல்லாஹ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டதுடன் உடற் பயிற்சி தொடர்பான காணொளிகளும் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-








