Breaking News

மட்டு திருமலை பிரதான வீதியில் காணி ஒன்றில் உருக்குளைந்த நிலையில் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மலசலகூட அறையொன்றில் உருக்குளைந்த நிலையில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று 03/06/2016 புதன்கிழமை மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி சடலத்தை பார்வையிட அதிகளவான பொது மக்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்த வன்னமுள்ளனர்.

குறித்த சடலம் தொடர்பான விசாரணைகளை ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


-பழுலுல்லாஹ் பர்ஹான்-