உண்மையானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வே உண்மையான நல்லிணக்கமாக அமையும்
இலங்கை வந்துள்ள ஐ.நா ஆணையாளருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போது உண்மையானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வே உண்மையான நல்லிணக்கமாக அமையுமென, ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைனுக்கு எடுத்துரைத்ததாக உடகங்களுக்கு எதிர்கட்சிதலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.



