பண்டிகைக் காலத்தில் நீர் பாவனை 20சதவீதத்தால் அதிகரிப்பு
புத்தாண்டு காலத்தில் நீர் பாவனையானது 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளமையால் தற்போது உயர்வான பிரதேசங்களுக்கு நீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை காணப்டுவதாக சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் குறிப்பிட்டுள்ளார். எனினும் தட்டுப்பாடின்றி பாவனையாளர்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக நீர் சுத்திகரிப்பின் அளவை 1.8 மில்லியன் மீற்றர் கனவளவாக உயர்த்தி, சகல நீர்த்தேக்கங்களினதும் நீரை விநியோகிக்கும் பம்பிகள் முழுஅளவில் பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.