Breaking News

மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா

(என்டன்)

மட்டக்களப்பு புளியடிக்குடா புனித  செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா  திருப்பலி  திருகோணமலை மறை  மாவட்ட  ஆயர் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது.


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி உப்போடை புளியடிக்குடா  புனித  செபஸ்தியார்  ஆலய  வருடாந்த  திருவிழா  திருப்பலி   24.04.2016 ஞாயிற்றுக் கிழமை  காலை 07.00 மணிக்கு   திருகோணமலை  மறை  மாவட்ட  ஆயர்  கிறிஸ்டியன்  நோயல்  இமானுவேல்   தலைமையில்  ஆலய பங்கு தந்தை லோரன்ஸ் , அருட்தந்தை  போல்சற்குண நாயகம் , அருட்தந்தை  நவாஜி, அருட்தந்தை என்டன் பிரதாப்ராஜ் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .

ஆலய வருடாந்த  திருவிழா கடந்த  15.04.2016  வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து நவநாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு திருசெபமாலை அருளுரைகளுடன் திருப்பலிகள் இடம்பெற்றது23.04.2016  சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திவ்வியநற்கருணை வழிபாடுகளும், மறைவுரைகளும் இடம்பெறவுள்ளதுடன் புனிதரின்   திருஉருவம் பவணி வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .

24.04.2016   ஞாயிற்றுக் கிழமை  காலை 07.00 மணிக்கு இடம்பெற்ற திருவிழா திருப்பலியில்  திருகோணமலை  மறை  மாவட்ட  ஆயர்  கிறிஸ்டியன் நோயல் இமானுவேல்   தலைமையில் பங்கு மாணவர்களுக்கு புதுநன்மை, உறுதிப்பூசுதல் ஆகிய  அருள் அடையாளங்கள்  வழங்கப்பட்டு  தொடர்ந்து திருவிழா  விசேட கூட்டுத்திருப்பலி  ஒப்புகொடுக்கப்பட்டது .
திருப்பலியின் பின்  ஆலய கொடியிறக்கப்பட்டு   வருடாந்த ஆலய திருவிழா இனிதாக நிறைவு பெற்றது .  இந்த திருவிழா திருப்பலியில் பெருமளவான இப்பகுதி மக்கள் கலந்து சிறப்பித்தனர் .