Breaking News

ஃபேன்' படம்... 10 நாட்களில் உலகெங்கும் ரூ 140 கோடி வசூல்... ஆனாலும் போதாதாம் !

ஷாரூக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஃபேன் திரைப்படம் வெளியாகி 10 நாட்களான நிலையில் உலகெங்கும் ரூ 140.70 கோடியை வசூலித்துள்ளது. ஷாரூக்கான் இரட்டை வேடங்களில் நடித்து, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெளியான படம் ஃபேன்.

ஒரு முன்னணி நடிகருக்கும் அவரது வெறித்தனமான ரசிகனுக்கும் இடையிலான புரிதலின்மையைச் சொல்லும் இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. படத்தில் ஹீரோயினோ, பாடல்களோ இல்லை என்றாலும், சுவாரஸ்யமான திரைக்கதை ரசிகர்களைத் தொடர்ந்து பார்க்க வைத்திருக்கிறது. இதுவரை ஃபேன் படம் ரூ 79.25 கோடியை இந்தியாவில் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் மொத்தம் ரூ 61.35 கோடியைக் குவித்துள்ளது. மொத்தம் ரூ 140.70 கோடிகள் வசூலாகியுள்ளது. 

ஆனாலும் இந்திய அளவில் வசூலில் இது திருப்தியான தொகை இல்லை என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸில். காரணம், மை நேம் ஈஸ் கான் தொடங்கி, ஷாரூக் நடித்த அத்தனைப் படங்களும் பத்து நாட்களுக்குள் இந்தியாவிலேயே ரூ 100 கோடியை ஈட்டிவிடும். ஃபேன் மட்டும்தான் அதை ஈட்டத் தவறியிருக்கிறது.