ரஜினியுடன் சண்டைக் காட்சியில் ராதிகா ஆப்தே... 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் இணையத்தில் டீசர்
கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் சண்டைக் காட்சியில் ராதிகா ஆப்தே நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இப்போது எதையும் சொல்ல முடியாது என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. தாணு தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் இப்படத்தின் டப்பிங்கில் கலந்துகொண்ட ரஜினி, தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டார். இந்தப் படத்துக்காக 5 நாட்கள் டப்பிங்குக்கு ஒதுக்கினார் ரஜினி. இதுவரை அவர் நடித்த படங்களில் அதிக நாள் டப்பிங் பேசியது கபாலிக்குத்தான். மற்ற நடிகர்கள் அனைவரும் இப்படத்திற்கு டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். டப்பிங் பணிகளோடு, டீசர் தயார் செய்யும் பணிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் டீசர் இணையத்தில் வெளியாகிறது.