Breaking News

மக்களின் மீது பாரத்தை சுமதும் வரி அதிகரிப்பை இடமளியேன்

மக்களுக்கு மேலும் இன்னல்களை தரும் விதத்திலான எந்தவிதமான வரி அதிகரிப்புகளுக்கும் நான்  ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்  என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

மேலும் வரி அதிகரிப்பு  யோசனைகளை முன்வைக்கும் பொருளியல் நிபுணர்கள் இருப்பார்களாயின் அவர்களை வீட்டுக்கு அனுப்புவேனே தவிர, நாட்டின் பொருளாதார முநேற்றங்களுக்கான  வேலைத்திட்டங்களுக்கு இவ்வாறானவர்களின் யோசனைகளை  பெற்றுக்கொள்ளத் தான் தயாரில்லை என்றும் அவர் தெரிவித்தார்.