Breaking News

மதுபோதையில் வாகனம் ஓடினால் இனிமேல் ஓடவே முடியாது !!!

எதிர்வரும் தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்தும் சாரதிகளின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை எனவும், நேற்று(11) முதல் இந்த நடவடிக்கை நடைமுறை அமுல்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். 

அவர் தெரிவிக்கையில் 'இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின் வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரமொன்றை வழங்கி வந்தோம். ஆனால், நேற்று முதல், அந்த நடைமுறையை அமுலில் இருக்காது. இந்த தற்காலிக அனுமதிப்பத்திரம் இனிமேல் வழங்கப்பட மாட்டாது' என்று கூறினார்.