வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அக்னி நட்சத்திரம் ஹிந்தியில் தயாராகிறது!
வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் தயாராகிறது அக்னி நட்சத்திரம் திரைப்படம். மணிரத்தினம் இயக்கத்தில் இளையராஜா இசையில் கடந்த1988-ம் ஆண்டு வெளியான அக்னி நட்சத்திரம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றும் கேட்டு ரசிக்கும்படியான பிரமாத பாடல்களைப் போட்டிருந்தார் இளையராஜா.
இதனை அக்னி நட்சத்திரா என்ற பெயரில் இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்குகிறார். இவர் கடைசியாக அமிதாப் பச்சன் மற்றும் பர்ஹான் அக்தர் நடிப்பில் வாசீர் என்ற வெற்றி படத்தை தந்தவர். ஏற்கெனவே தெலுங்கிலும், இந்தியிலும் இத்திரைப்படம் உருவாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இதனை மீண்டும் இயக்குகிறார் பிஜோய். படத்தில் நடிப்பவர்கள் முன்னணி நடிகர்களா? அல்லது புதிய முகங்களா? என கேட்டதற்கு அது பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார், இயக்குநர் மணி ரத்னத்திடம் முன்னாள் உதவி இயக்குநர்தான் பிஜோய் நம்பியார்