எமக்கு குடும்பத்துக்கு சிறைச்சாலைகள் புதியவையல்ல
ராஜபக்ஷகுடும்பத்தினருக்கு சிறைச்சாலைகள் ஒன்றும் புதியவையல்ல என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றயதினம் கரன்தெனியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்குபற்றி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'டி.எம். ராஜபக்ஷ, 1936ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்தே முதல் முறையாக தேர்தலுக்குச் சென்றார் எனவும் அதனையடுத்து முக்கொலை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவையும் அடைத்தனர், நானும் சிறை சென்றுதிரும்பிவிட்டேன். அண்மையில் யோஷிதவும் சிறைக்குச் சென்று திரும்பியுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு, சிறைவாசம் ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்தார்.