ஹன்சிகாவைத் தொடரும் 2 மில்லியன் பேரிடமும் அவர் ...
ஹன்சிகாவை ட்விட்டரில் தொடர்வோர் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. சமூக வலைத் தளங்களில் அதிக ரசிகர்கள், ஃபாலோயர்களை வைத்திருப்பவர்களில் முக்கியமானவர் ஹன்சிகா.
ஹன்சிகாவுக்கு ஃபேஸ்புக்கில்தான் ஏராளமான ரசிகர்கள் - விரும்பிகள் இருக்கிறார்கள். அவரது ஃபேஸ்புக் பக்கத்தை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் விரும்பியுள்ளனர்
இன்ஸ்டாகிராம் மற்றொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு 1 மில்லியன் பின்தொடர்வோர் இருக்கிறார்கள்.
ட்விட்டர் இப்போது ட்விட்டரில் அவரைத் தொடர்வோர் எண்ணிக்கை 2 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2 மில்லியன் ஃபாலோயர்கள் என்பது ட்விட்டரில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
பகிர்வதில் முதலிடம் இந்த மூன்று சமூக வலைத் தளங்களிலுமே தன்னைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஹன்சிகா பகிர்ந்து வருகிறார். தனக்கும் சிம்புவுக்கும் இடையிலான உறவு முறிவைக் கூட அவர் ட்விட்டரில்தான் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.