காஜல் அகர்வாலின் சம்மதமின்றி எடுக்கப்பட்ட 'லிப் டு லிப்' முத்தக் காட்சி...!!
முதல் முறையாக ஒரு லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். ஆனால் தமிழில் இல்லை... இந்தியில்! இந்தக் காட்சி திட்டமிட்டு படமாக்கப்படவில்லையாம். காஜலே எதிர்பாராத வகையில் நேர்ந்துவிட்டதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார் ரந்தீப் ஹூடா. இது ஒரு ரொமான்டிக் கதையாம். ஆனால் சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்ட போது காஜலுக்கு இதுகுறித்து எதுவும் சொல்லப்படவில்லையாம்.
திடீரென்று... இந்தக் காட்சியை மலேசியாவில் வைத்து படமாக்கியுள்ளனர். மிகவும் உணர்ச்சிகரமான அந்தக் காட்சி படமாகிக் கொண்டிருக்கையில், ரந்தீப் ஹூடா திடீரென்று காஜல் அகர்வாலின் முகத்தை இழுத்துப் பிடித்து உதட்டோடு உதடு பதித்துவிட்டாராம்.
காஜல் அதிர்ச்சி இதனால் அதிர்ச்சியடைந்த காஜல், சட்டென்று அங்கிருந்து ஓடி தன் கேரவனுக்குள் போய்விட்டாராம். பின்னர் இயக்குநரை அழைத்து அந்தக் காட்சியை நீக்கிவிட்டு, வேறு மாதிரி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாராம்.
சமாதானம் செய்த டைரக்டர் உடனடியாக காஜலிடம் சென்ற இயக்குநர் தீபக் அவரை சமாதானம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "காஜல் பெரிய நடிகை என்பதும், அவர் இதுவரை முத்தக் காட்சியில் நடித்ததில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அந்தக் காட்சி மிக இயல்பாக இருக்க வேண்டும். எனவே ரந்தீப் முத்தமிட்டது இயல்பாக நடந்ததுதான். அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய பிறகு காஜல் அமைதியாகிவிட்டார்," என்றார்.