Breaking News

திருமணமான மறுநிமிடமே மனைவி விவாகரத்து செய்த கணவர்

அரபுநாடான சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் செல்போனில் உரையாடிக் கொண்டிருந்தார். 

அப்போது அவருடன் பேச மணமகன் விரும்பினார். அதை மணமகள் கண்டுகொள்ளவில்லை. செல்போனில் உரையாடுவதிலேயே மிகவும் குறியாக இருந்தார். இது குறித்து கேட்டதற்கு திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் பதில் தெரிவிப்பதாக கூறினார்.

உடனே மணமகன் உனக்கு நான் முக்கியம் இல்லையா? என்று கேட்டார். அதற்கு ஆம் என மணமகள் பதில் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு ஓட்டலை விட்டு வெளியேறினார்.