மஹிந்த கார் ஒன்றை லஞ்சமாக வழங்கியது எனக்கு எனக்குத் தெரியும் !
முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தாருடன் நன்கு பழகியவர் என்ற வகையில் அவருக்கு இலங்கயிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளமை பற்றி தமக்குத் தெரியும் என்வும், அதுதொடர்பில் அரசாங்கம் உரியமுறையில் விசாரணை நடத்தவேண்டும் என கடந்த ஆட்சிக்காலத்தில் மஹிந்தவின் தீவிர விசுவாசியாகவும் முன்னாள் அமைச்சரும்மான , கடந்த ஆட்சிக்காலத்தில் மஹிந்தவின் தீவிர விசுவாசியாகவும் காணப்பட்ட மேர்வின் சில்வா ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக கொழும்புக்கு வந்த மஹிந்தவுக்கு, கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்குமாளவிற்கு வசதி அப்போது இருக்கவில்லையெனவும், அவரின் ஆட்சிக்காலத்தில் பாடசாலை அதிபர் ஒருவருக்கு கார் ஒன்றை பரிசளிக்கும்போது, தாமும் மஹிந்தவுடன் இருந்ததாக தாகவும் தெரிவித்துள்ளார்.



