Breaking News

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம்காரணமாக கால்களை இழந்த 10 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் தயாரிப்பு

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜான்பாத் (54). இவரது மனைவி கரோல். இவர்களது மகன் ஹார்வி பாரி (10). பிறந்து 10 மாதங்களே ஆன நிலையில் இவனை ‘மெனின்ஜிடிஸ்’ என்ற நோய் தாக்கியது.

இந்த நோய் மூளை மற்றும் தண்டுவடத்தின் வெளிப்புற சுவர்களில் தாக்குதல் நடத்தி அதன் செயல்பாடுகளை இழக்கச் செய்தது. இதனால் அவனது 2 கால்களும் செயல்பாடுகளை இழந்தது.

அதை தொடர்ந்து உயிர் பிழைக்க வைக்க அவனது 2 கால்களின் முழங்காலுக்கு கீழேயும், வலது கையில் உள்ள விரல்களையும் அகற்ற வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே அவனது 2 கால்களும் அகற்றப்பட்டு அமெரிக்காவில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.

ஆனால் இவனுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. செயற்கை கால்கள் மூலம் பல போட்டிகளில் வெற்றி பெற்று தங்க பதக்கங்கள் பெற்றான். இதற்கிடையே அவனுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது மோகம் அதிகம். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனை படைக்க வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் இருக்கிறான்.

தற்போதுள்ள செயற்கை கால்கள் மூலம் கிரிக்கெட் விளையாட்டில் வேகமாக ஓட முடியாது. அதற்கு வசதியாக அதிநவீன செயற்கை கால்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்தான். அதை தொடர்ந்து அவனுக்கு ‘பயோனிக் கிரிக்கெட்’ கால்களை ஒரு நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. அதன் மூலம்தான் கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைப்பேன். இங்கிலாந்துக்கு பெருமை சேர்ப்பேன் என்று சிறுவன் ஹார்விபாரி தெரிவித்தான்.