'சூர்யா, விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான்'..வாக்களிக்க தவறிய முன்னணி நட்சத்திரங்கள்
நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்கினை செலுத்த முன்வராதது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் 100% வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. திரைப் பிரபலங்களுக்கு தனி வரிசை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறினாலும், முன்னணி நட்சத்திரங்கள் பலரும் வரிசையில் நின்று வாக்களித்திட அதிகளவில் ஆர்வம் காட்டினர்.