Breaking News

வாலிப மகனின் ஆன்மா சாந்தியடையாத பெண் பிணத்துடன் கோலாகல திருமணம் செய்துவைத்த பெற்றோர்

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வசிக்கும் ஒரு பெற்றோரின் வாலிப வயது மகன் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் அகால மரணம் அடைந்தார். அவருக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. இதனால் அவரது ஆவி (ஆன்மா) சாந்தியடையவில்லை என பெற்றோர் கருதினர்.

ஆகவே மகனின் ஆவிக்கு திருமணம் செய்துவைத்து, அவரது ஆன்மாவை சாந்திப்படுத்த பெற்றோர் முடிவு செய்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருபெண் சமீபத்தில் மரணம் அடைந்தார். உடனே அந்த பெண்ணின் பிணத்துக்கும் தனது மகன் ஆவிக்கும் திருமணம் செய்ய எண்ணினர்.

தங்களது ஆசையை இறந்துபோன பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிவித்து, அவர்களை சம்மதிக்க வைத்தனர். பின்னர் முறைப்படி மகன் ஆவிக்கும், இறந்த பெண்ணின் பிணத்துக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. அதற்காக பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வரதட்சணையும் கொடுக்கப்பட்டது.

இதன்மூலம், மூட நம்பிக்கைகள் என்பது நமது நாட்டில் மட்டுமல்ல. உலக நாடுகள் அனைத்திலும் நடைமுறையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. சீனாவில் இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்களுக்கு பிணங்களை ஏற்பாடு செய்வதற்கென்றே சில இடைத்தரகர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.