Breaking News

இலங்கை இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டி அணியில் மாற்றம்...

இலங்கை அணிக்கு எதிரான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 9–ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 2–வது டெஸ்டில் விளையாடிய அதே அணி 2–வது போட்டியில் களம் இறங்குகிறது.