போலியோவை ஒழிக்க புலிகளும் உதவினர்
தற்போது இலங்கை போலியோ நோயற்ற நாடாக திகழ்கின்றதாகவும், இன் நோயை ஒழிப்பதற்கு விடுதலைப் புலிகளும் தமது முழு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தென்கொரிய விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நேற்ரையதினம்(29) இடம்பெற்ற ரொட்டறிக் கழகத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



