பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகளுடன் நட்டஈட்டும் வழங்கப்படும்
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிபுற்ற மக்களுக்கு, பாதுகாப்பான இடங்களில் வீடுகளும் நட்டஈடும் வழங்க ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு நேர்ந்த அனர்த்த நிலைமைகள் தொடர்பில் நேற்று (25) நாடாளுமன்றில் இடம்பெற்ற விசேட விவாதத்தில் பங்குபற்றி கருத்துரைக்கையிலே பிரதமர் இவ்வுறுதிமொழியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.



