Breaking News

இலங்கையில் இன்னும் சித்திரவதை தொடர்கிறது

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப்போர் முடிவடைந்தநிலையிலும் தமிழ்  மீதான சித்திரவதை தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை, ஏனைய வன்கொடுமை, மனிதாபிமானமற்ற தண்டனை சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் தெரிவித்துள்ளார். எட்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த அவர், நேற்று(7) கொழும்பில்  நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.