தற்போது 35 இன்னும் சுமார் 65 குழந்தைகளுடன் சேர்த்து 100 குழந்தைகளுக்கு அப்பாவாக ஆசை!
பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவை சேர்ந்தவர் சர்தார் ஹாஜி ஜன் முகமது கில்ஜி (46). இவர் மருத்துவ தொழில் நுட்ப நிபுணராக இருக்கிறார்.
பாகிஸ்தானில் முதல் மனைவி அனுமதியின் பேரில் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் தற்போது அவர் 3 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். அவர்கள் மூலம் இதுவரை 35 குழந்தைகள் பெற்றுள்ளார்.
ஆனால் அவர் 100 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதற்காக 4-வது திருமணம் செய்ய பெண் தேடுகிறார். மத கடமையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அவர் ஏராளமான குழந்தைகளை பெற விரும்புவதாக தெரிவிக்கிறார்.
தற்போதுள்ளவைகளில் இவரது முதல் குழந்தைக்கு 18 வயது ஆகிறது. அதே நேரத்தில் சில வாரங்களுக்கு முன்புதான் கடைசி குழந்தை பிறந்தது. இவர் தனது 33 வயதில் குழந்தை பெற தொடங்கினார்.
ஒரு மாதத்தில் மனைவிகள் மூலம் இவருக்கு 2 மகள்கள் பிறந்தனர். இவர்கள் 6 நாள் இடைவெளியில் பிறந்ததாக தெரிவித்தார். பெற்றோர்கள் பார்த்த பெண்களை திருமணம் செய்தார். 26-வது வயதில் முதல் திருமணம் செய்தார். அடுத்த வருடத்தில் 6 மாத இடைவெளியில் மேலும் 2 பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி கொண்டார்.
தற்போது 4-வது திருமணம் செய்ய ‘பேஸ்புக்’ இணையதளத்தில் அறிவிப்பு செய்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் தனது குடும்பம் பற்றிய செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



