ஆயுதக் களஞ்சியசாலை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் 1 km இற்கு அப்பால் விடு உள்ளவர்கள் திரும்பலாம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை 06 மணியளவில் கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ, இன்று திங்கட்கிழமை (06) அதிகாலை 01 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கபடத்தைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட பொதுமக்களில் 1Km இக்கு அப்பால் வீடுகள் உள்ளவர்கள் வீடுதிரும்பலாம் என அறிவிக்கபட்டுள்ளது.
அத்துடன் சந்தேகத்திற்கிடமாக கிலேகிடக்கும் பொருட்களையும் எடுக்கவேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தீ விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பொதுமக்கள் உட்பட 47 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது



