Breaking News

அவசர அம்புலன்ஸ் சேவைக்கென 1990ஐ அழையுங்கள்

முழுமையான வசதிகளுடன்கூடிய அவசர அம்புலன்ஸ் சேவைக்கான சேவையை பெற்றுக்கொள்ள, தொலைபேசிஇலக்கம் 1990ஐ அறிமுகப்படுத்துவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சேவையினை, மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குவதற்று அரசாங்கம்  முயற்சி எடுத்துள்ளதாகவும் மேலும் இச்சேவையினை சுகாதார அமைச்சுடன் இணைந்து, இந்தியாவினது   Vk.Emri எனும் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.