Breaking News

குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது ; ஐநா

குற்றவாளிகள்அ சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று(30) நடைபெற்ற இலங்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில் அண்மைக்காலமாக  பாதிப்புற்றவர்களுக்கு நீதி வழங்குவதற்கென ஓரளவு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் போர் குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றதாக கருதப்படுகின்றவேலையில் அரசினது தகவல்படி 8,000 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6,350 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஆனால் ஐ.நா. நிபுணர் குழுவானது 40,000 பேர் உயிரிழந்திருகக்கூடும் எனவும்,

தெரிவிக்கையில் எது எவ்வாறாயினும் குற்றமிழைத்தோர் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாதெனவும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெ தவிர வெறுமனே இடமாற்றமாக அமைய கூடாது’ எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.