Breaking News

30 லட்சம் கார்களை திரும்ப பெற்றது டொயோட்டா நிறுவனம் !

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான டொயாட்டா நிறுவனம், தனது நிறுவன கார்களின் காற்றுப்பைகள், மற்றும் மாசு வெளியேற்றத்தில் குறைபாடு இருக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறி உலகம் முழுவதும் இருந்து சுமார் 3.37 மில்லியன் கார்களை திரும்ப பெற்றுள்ளது. 

செவ்வாய்க்கிழமை காற்றுப்பைகளில் குறைபாடுகள் அதை இருப்பதால் சீரமைக்க வேண்டியுள்ளது என்று 1.43 மில்லியன் கார்களை திரும்ப பெற்ற நிலையில், காற்று மாசுவை குறைக்கும் யூனிட்டில் பிரச்சினை இருப்பதாக கூறி 2.87 மில்லியன் கார்களை திரும்ப பெறுவதாக நேற்று தெரிவித்துள்ளது. காற்று மாசுவை ஆவியாக்கும் கட்டுப்பாட்டு யுனிட்டில் பிளவுகள் ஏற்படுவதால் காலப்போக்கில் எரிபொருள் கசிவுக்கு வழி ஏற்படும் வாய்ப்புள்ளது.  2006 முதல் 2015 வரையிலான பிரிஸ், கோரால்லா, ஆரிஷ், போன்ற கார்களில் இந்த பிரச்சினை உள்ளது. இதனால் மாசு வெளியேற்றம் தொடர்பாக 2.87 மில்லியன் கார்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

காற்றுப்பைகளில் குறைபாட்டை பொறுத்தவரை காற்றுப் பைகளை அரைகுறையாக வீங்கச்செய்யும், ஆகையால் விபத்துகளில் காயங்கள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மாசுவெளியேற்றம் தொடர்பாக ஜப்பானில் இருந்து 1.55 மில்லியன் கார்களும், ஐரோப்பாவில் இருந்து 7,13,000 கார்களும், சீனாவில் இருந்து 35 ஆயிரம் கார்களும், பிற பகுதிகளில் இருந்து 5,68ஆயிரம் கார்களும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.   

இந்த மிகப்பெரிய வாகன நிறுவனம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள பல சம்பவங்களில் இதுவே மிகச் சமீபத்திய நிகழ்வாகும். இந்த சமீபத்திய தவறுகள் தொடர்பாக விபத்துக்கள் ஏதும் நடைபெற்றதாக தாங்கள் அறிந்திருக்கவில்லை என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.