சிரியாவில் ISIS தீவிரவாதிகள் 250 பேர் கொன்று குவிப்பு ?
சிரியாவில் ஐ.எஸ். போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரங்களில் ஒன்றான பலுஜாவை அரசுப்படை கடந்த சில தினங்களுக்கு முன்பு மீட்டது.
இதையடுத்து அந்த நகரில் இருந்து ஐ.எஸ். போராளிகள் வெளியேற தொடங்கி உள்ளனர். சிரியா எல்லையையொட்டி உள்ள ஈராக்கின் மேற்கு பாலைவன பகுதிக்கு செல்வதற்காக ஐ.எஸ். போராளிகள் பலர் அமரியாத் அல்-பலுஜா நகருக்கு அருகே வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் அமெரிக்க கூட்டுப்படையின் போர் விமானங்கள் விரைந்து சென்று ஐ.எஸ். போராளிகளின் வாகனங்கள் மீது குண்டு மழை பொழிந்தன. இதில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 250 ஐ.எஸ். போராளிகள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையென்றால் ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது அமையும்.