Breaking News

இலங்கையுடன் முதல் ஒருநாள் போட்டி அவுஸ்திரேலியா வெற்றி!!

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இலங்கை 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது. அவுஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.

கொழும்பு ஆர்.பி.எஸ் மைதானத்தில் நேற்று ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 80 ரன்னும், குஷால் பெரேரா 67 ரன்களும் குவித்தனர்.

இதனை அடுத்து துடுப்பாட்டத்தி இறங்கிய அவுஸ்திரேலியா 46.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (58), ஆரோன் பிஞ்ச் (56) ரன்னும் எடுத்தனர். 2வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.