Breaking News

துருக்கி விமானநிலைய தாக்குதலில் 41 பேர் பலி, 150க்கும் மேற்பட்டோர் காயம்

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் தலைமை சர்வதேச விமானநிலையத்தில் 3 தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், இந்த தீவிரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொடூ தாக்குதலை நிகழ்த்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், இது உலக மக்களுக்கு அபாயத்தை உணர்த்த விடப்பட்ட எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.

ஜனநாயக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், இது போன்ற தாக்குதல்களால் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்காது. பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய கிழக்கு, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.