Breaking News

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான மாதாந்த குழு கூட்டம்


(லியோன்)


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான மாதாந்த குழு கூட்டம் 26.06.2016 மாலை தாண்டவன்வெளியில்  இடம்பெற்றது .

 மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இயங்கும்  சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான மாதாந்த குழுக் கூட்டம் சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ஸ்டீபன் ராஜன் தலைமையில்  26.06.2016 மாலை  மட்டக்களப்பு  தாண்டவன்வெளி பேர்டினன் மண்டபத்தில்  இடம்பெற்றது .

இடம்பெற்ற மாதாந்த குழுக்கூட்டத்தில் போது கடந்த நாட்களில் தமது கிராம சேவை பிரிவுகளில்  இடம்பெறுகின்ற சமூக மட்ட பிரச்சினைகள் அதனுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாகவும் ,கிராம மட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள்  தொடர்பாகவும்   கலந்துரையாடப்பட்டது .

உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள்  தொடர்பாக சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுடன் மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து  செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சிவில் பாதுகாப்பு குழு தலைவரினால் தெரிவிக்கப்பட்டது .


இம்மாதத்திற்கான குழுக்கூட்டத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ஹெட்டிஹாரச்சி , மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .