Breaking News

வைரம் பதித்த முதலை தோல் கைப்பை 300,000 டாலர்க்கு ஏலம்

ஹாங்காங்கில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஒரு கைபை ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அது இமாலயன் நிலோடிகஸ் இன முதலை தோலினால் தயாரிக்கப்பட்டது.

அதில் வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த கைப்பையை டெலிபோனில் பலர் ஏலம் கேட்டனர்.

இறுதியில் அந்த கைப்பை 3 லட்சம் டாலர்க்கு ஏலம் போனது. அதை விலைக்கு வாங்கியவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த கைப்பை ரூ1 கோடியே 32 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அது ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

கையினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கைப்பையின் பூட்டு கொக்கி போன்றவை 18 காரட் தங்கத்தினால் தயாரிக்கப்பட்டவை.

இதற்கு முன்பு ஹாங் காங்கில் ஒரு கைப்பை ரூ.1 கோடியே 47 லட்சத்துக்கு ஏலம் போய் இருந்தது. அந்த சாதனையை இந்த கைப்பை முறியடித்தது.