Breaking News

இலங்கை-இங்கிலாந்து மோதும் 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இன்று 3-வது ஆட்டம் நடைபெற்றது

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் பெரேரா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

பெரேரா 9 ரன்கள் எடுத்த நிலையிலும், குணதிலகா 1 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்த வந்த குசால் மெண்டிஸ் 66 பந்தில் 53 ரன்னும், சண்டிமால் 77 பந்தில் 62 ரன்களும், கேப்டன் மேத்யூஸ் 67 பந்தில் 56 ரன்களும் எடுத்தனர். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் கௌரவமாக சென்று கொண்டிருந்தது.

அதன்பின் தரங்காவை (40) தவிர மற்ற வீரர்கள் ஒற்றைப்பட எண்ணில் வெளியேற இலங்க அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு248 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இங்கிலாந்து அணி சார்பில் பிளங்கெட், வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் களம் இறங்கியது

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 16 ரன் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. 5 போட்டி கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4–வது ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் நடக்கவிருக்கிறது.