Breaking News

241 பயணிகளுடன் தரையிறங்கும்போது தீப்பற்றிய சிங்கப்பூர் விமானதின் பயணிகள்...

சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான SQ368 விமானம் இத்தாலியின் மிலன் நகரை நோக்கி இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது. நடுவானில் சுமார் இரண்டு மணிநேர பயணத்துக்கு பின்னர் அந்த விமானத்தில் என்ஜின் ஆயில் தொடர்பான எச்சரிக்கை விளக்கு எரிய தொடங்கியது.

உடனடியாக, சிங்கப்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட விமானி, அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, அந்த விமானம் சிங்கப்பூருக்கு திரும்பி வந்தது.

காலை 6.55 சாங்கி விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கியபோது விமானத்தின் வலதுப்புற என்ஜின் திடீரென தீபிடித்தது. இதைப்பார்த்து உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பீதியால் அலறினர். எரிந்தபடியே ஓடுபாதையில் ஊர்ந்து சென்று விமானம் ஓரிடத்தில் நின்றதும் அதில் இருந்த அனைவரும் அவசர வழியாக கீழே இறக்கப்பட்டனர்.

அதற்குள் அங்கு விரைந்துவந்து, தயார்நிலையில் காத்திருந்த தீயணைப்பு வாகனங்கள், சில நிமிடங்களுக்குள் தீயை அணைத்து முடித்தன. விமானியின் முன்எச்சரிக்கை நடவடிக்கையால் நடுவானில் 200-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாக இருந்த விபரீதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.