Breaking News

தமிழ்க் கைதிகளை மன்னிக்கவேமுடியாது

தன்னை கொல்வதுக்கு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியாக இருந்தனர் என்ற  குற்றஞ்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு தமிழ்க் கைதிகளை மன்னிக்க முடியாது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

2006ம் ஆண்டு கொழும்பில்-2 பித்தளை சந்தியில், டிசெம்பர் 1ஆம் திகதியன்று முன்னைநாள் பாதுகாப்புச் செயலாளர் பயணித்த வாகனத் தொடரணியின்மீது நடாத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான வழக்கானாது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று(27) விசாரணைக்கு எடுக்கப்பட்டத்திற்கமைய அவ்வழக்கின் விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே  அவர் இதனை கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.