Breaking News

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில் தீவிபத்தில் வாகனம் தீக்கிரை

(லியோன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி  பகுதியில் உள்ள  வாகனம் திருத்தும் நிலையத்தில் இன்று பிற்பகல் தீவிபத்தில் வாகனம் தீக்கிரையானதாக   மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர் .

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில்  உள்ள ஆர் .இளந்திருமாறன் என்பவரின் வாகனம் திருத்தும் நிலையத்தில் திருத்துவதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொயடா ரக வண்டியே  இவ்வாறு தீக்கிரையாகி உள்ளது

இச்சம்பவம் இன்று நண்பகல்    01.00  மணியளவில்  இடம்பெற்றதாக வாகனம் திருத்தும் நிலையத்தின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வாகனம் திருத்தும் நிலைய உரிமையாளர் தெரிவிக்கையில் இன்று நண்பகல்    01.00  மணியளவில்  வாகனத்தை திருத்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் இதன்காரணமாக  தமக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் . இதேவேளை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சிறு சேதங்களுக்கு உள்ளாதனாக  வாகன திருத்தும் நிலைய உரிமையாளர் தெரிவித்தார்

இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். -