உங்கள் அன்புக்கு நன்றி, ஆனால் எனக்கு கூச்சமா இருக்கு...
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் தொடரி படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. முழுக்க ரயிலில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய தம்பி ராமையா, பாபு கணேஷ் உள்பட சிலர், தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைத்தனர். அதனை தனது பேச்சில் மறைமுகமாக குறிப்பிட்ட தனுஷ், என்னைப் பற்றி பலரும் பெருமையாக பேசினார்கள். தகுதிக்கு மீறி புகழ்ந்தார்கள். அவர்களின் அன்புக்கு நன்றி. ஆனால் எனக்கு கூச்சமாக இருந்தது என்றார்.



