Breaking News

கபாலிக்கு போட்டியா இந்த ஜோக்கர்

கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில், அட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் பட புகழ் ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம்  ‘கபாலி’. இந்த படம் ஜுலை மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதே சமயத்தில்  ‘குக்கூ’ பட இயக்குனர் ராஜூமுருகன் இயக்கியுள்ள ‘ஜோக்கர்’ படமும் வெளியாகவுள்ளது. இந்த படம் தற்போதைய இந்திய அரசியல் அமைப்பை விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.

கபாலி படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்பின் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கபாலி வெளியாகும் ஜூலை மாதமே ஜோக்கர் படமும் வெளியாவதால், கபாலிக்கு போட்டியாகவே இந்தப் படம் பார்க்கப்படுகிறது.