Breaking News

முச்சக்கர வண்டியிலும் பார்க்க குறைவான விலையில் கார் !


தற்போதுள்ள முச்சக்கரவண்டியின் விலையிலும் பார்க்க குறைந்த விலையில், நான்கு சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு வளியமைத்து கொடுப்பதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தெரிவித்திருந்தார். 

மேலும் இவ்வாகனம் தொடர்பான விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளன.  3 இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்யக்கூடிய இந்தக் கார், உலகின் மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய கார் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

போர்ட் நிறுவன தயாரிப்பான இக்கார் கொட்ரிசைக்கிள் (Quadricycle) எனும் பெயருடையது இதில், நான்கு பேர் மாத்திரமே பயணிக்க முடியுமாயுள்ளதுடன் ஒரு லீற்றர் பெற்றோளுக்கு 36 கிலோமீற்றர் தூரம் செல்ல முடியும் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது