Breaking News

நெல்லை பேச்சு வழக்கை கற்கும் விஜய்

விஜய்யின் 60 -வது படத்தை பரதன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள். அதில் ஒரு கதாபாத்திரம் திருநெல்வேலியை சேர்ந்ததாக காட்டியிருக்கிறார்கள். அந்த கதாபாத்திரத்துக்காக நெல்லை பேச்சு வழக்கை விஜய் கற்று வருகிறார்.

திருநெல்வேலி பாஷையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை அதற்கென்றே பிரத்யேகமாக நியமித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.