சிகை அலங்காரத்திற்கு 10,000 யூரோவினை செலவழிக்கும் பிரான்சு ஜனாதிபதி
பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே. தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துவார்.
அவருடைய தலை வழுக்கையாக இருக்கும். உச்சந்தலையில் இருந்த முடிகள் ஒட்டு மொத்தமாக கொட்டி விட்டன. தலையின் இரு பக்கங்களில் மட்டும் முடி உள்ளது.
ஆனால், இந்த முடியை அலங்காரம் செய்வதற்கு அவர் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார். இதற்காக மட்டும் மாதம் ரூ. 7 லட்சம் செலவு செய்வதாக தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் கனார்டு என்ஜய்ன் என்ற வார பத்திரிகை வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பெரும்பாலான தலைவர்கள் ஆடம்பரம் மற்றும் அலங்கார பிரியர்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.



