Breaking News

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கிவைப்பு !

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு 150,000 ரூபாய் பெறுமதியான பாண்ட் வாத்திய கருவிகள் கல்வி ஆர்வலர்களாலும் நலன் விரும்பிகளாலும் இன்று வழங்கைவைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வின்போது மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரனால் வித்தியாலயத்திற்கு பாண்ட் வாத்திய கருவிகளை கைளிது உரையாற்றிய அவர் 'ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவுவதன் மூலம், பிரமிக்க வைக்கும் கல்வி வளர்ச்சியை அடைந்துகொள்ளலாம் எனவும்எமது நாட்டில் அரசினால் கல்வி, சீருடை என்பன இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள நிலையில், இத்தகைய வசதி வாய்ப்புக்களை வைத்துக் கொண்டு நாம் இன்னும் கல்வியில் முன்னேறவில்லை என்றால் நம்மை விட துரதிஷ்டசாலிகள் வேறு எங்கும் இருக்க முடியாது' எனவும் தெரிவித்தார் .