மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி வழங்கும் நிகழ்வு
(லியோன்)
இலங்கை
பொலிஸ் திணைக்களத்தின் 150வது வருட நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட
பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்
திணைக்கள உத்தியோகத்தர்களினால் சேவை திறனை பாராட்டும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயகவின்
ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி
பொலிஸ்மா அதிபர் W J . ஜாகொட ஆராய்ச்சி தலைமையில் உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி வழங்கும் நிகழ்வும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த
பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு
பிரதேச செயலக மண்டபத்தில் 23.07.2016 சனிக்கிழமை நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் திருமதி .பி .எஸ் . எம் . சார்ள்ஸ்
மற்றும் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் , சிவில் சமூக பிரதி நிதிகள், மத
தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர் .