இது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கவணத்திற்கு
(லியோன்)
உடைந்து விழும் நிலையில் காணப்படும் மாமாங்கம் முதலாம் குறுக்கு
வீதியில் உள்ள மின் கம்பம்
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குற்பட்ட மாமாங்கம் முதலாம் குறுக்கு வீதியில் உள்ள மின் கம்பம் நீண்டகாலமாக
பழுதடைந்த நிலையில் உடைந்து விழும்
நிலையில் காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .
இது தொடர்பாக இக்கிராம மக்கள் சம்பந்தப்பட்ட மின்சார சபை அதிகாரிகளுக்கு
பல முறை நேரடியாகவும் கடித மூலமும்
அறிவிக்கப்பட்ட போதிலும் இது வரை எதுவித
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்ல என இக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .







