மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற புனித நோன்பு பெருநாள் விசேட தொழுகையும் , துவா பிரத்தினைகளும்
(லியோன்)
நோன்பு பெருநாளை முன்னிட்டு முதல் அம்ச நிகழ்வாக அனைவரும் தமது தொழுகை கடமையில் ஈடுபட்டனர் .
இந்த நோன்பு பெருநாள் தொழுகையினை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு
காத்தான்குடி கடற்கரையில் விசேட தொழுகையும்
, துவா பிரத்தினைகளும்
மற்றும் குத்பா பிரங்கமும் காத்தான்குடி
இஸ்லாமிய நிலையத்தின் ஏற்பாட்டில் நடை பெற்றது.
இங்கு இடம்பெற்ற பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி ஏ.ஜி.
எம் .ஜலீல் மதனி நடாத்தி வைத்தார்.
பெருநாள் தொழுகை
பிராத்தனையில் காத்தான்குடி பகுதி அனைத்து இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்
பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும்
நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .
இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள் ,
நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள்
வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .