Breaking News

பஸ் , முச்சக்கர வண்டி கட்டணங்களுடன், தீப்பெட்டியினதும் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு

அனைத்து பஸ் கட்டணங்கழும் இன்று(01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன இதன்படி ஆகக்குறைந்த பஸ் கட்டணமாக 9 ரூபாயும் ஏனைய கட்டணங்கள் 6%  அதிகரிக்கப்பட்டும் அறவிடப்படுகின்றன. இதேவேளை, முச்சக்கரவண்டி கட்டணங்களும் இன்றிலிருந்து  5ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தீப்பெட்டியின் விலையும் 1 ரூபாவினால் இன்றுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாயாகும்.