ஒழும்பிக்கில் 462 பேரை களம் இறக்கும் பிரேசில்
ரியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரேசில் நாடு, 209 வீராங்கனைகள் உள்பட 462 பேர் கொண்ட வலுவான அணியை களம் இறக்குகிறது. ஒலிம்பிக்கில் பிரேசிலின் மெகா அணி இது (முன்பு 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக 277 பேர் ) தான். இது தவிர பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள், மருத்துவ உதவியாளர்கள் என்று மேலும் 344 பேரும் அந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். தடகளத்தில் ‘வைல்டு கார்டு’ சலுகை கிடைத்தால் இந்த எண்ணிக்கை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்.